மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், இன்று அதிகாலை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித்தின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், கனிமொழி எம்பி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆழ்துளை கிணறு தொடர்பான வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
குழந்தை சுஜித் இறந்ததற்காக வருந்துவதாகவும், குழந்தையின் மறைவால் துக்கத்தில் தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சுஜித் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சுஜித் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்