நாட்டில் வாகன விற்பனை மெல்ல மெல்ல வளர்ச்சியை பதிவு செய்யும் விலையில், இதுவரை தொடர்ந்து வந்த வீழ்ச்சி குறித்து நிர்மலா சீதாராமன் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகனச் சந்தை காந்த 10 மாதங்களுக்கும் மேலாக திண்டாட்டத்தைக் கண்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தீர்வை வழங்கியுள்ளார்.
அண்மையில் சென்னைக்கு வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிட்டி யூனியன் வங்கியின் 110வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
முன்னதாக தென்னிந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு சங்கம் அண்ணா சாலையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். மத்திய நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை பத்தியாளர்கள் முன்வைத்தனர். அப்போது வாகன விற்பனை வீழ்ச்சி குறித்தி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தற்போது பிஎஸ்-4 வாகன கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆனால் விரைவிலேயே (ஏப்ரல் 1, 2020 முதல்) பிஎஸ்-6 வாகன விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் புதியதாக வாகனம் வாங்க திட்டமிடும் பலரிடம் பிஎஸ்-4 வாகனம் மீது குழப்பம் உள்ளது. அவர்கள் பிஎஸ்-6 வாகனங்களை வாங்குவதற்காக காத்திருக்கின்றனர். அதனால் தான் வாகன விற்பனையில் மந்தகதி நிலவுகிறது என்று அவர் கூறினார்.
வரலாறு காணாத வகையில் வாகன விற்பனை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர்கள், அரசுத் துறை செயலாலர்கள், உயர் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் வாங்கப்படுவதற்கான தடை நீக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், 2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். பிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிஎஸ் 4 எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற ஊகங்களை தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும் கூறினார்.