ரூ. 99,950 ஆரம்ப விலையில் புதிய TVS Apache RTR BS-VI பைக் அறிமுகம்..

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்யும் அப்பாச்சி பைக் மாடல்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அப்பாச்சி ரேஞ்ச் பைக்குள் பிஎஸ்-6 எஞ்சின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


அதன்படி, அப்பாச்சி பிராண்டில் இரண்டு பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அதன்படி, TVS Apache RTR 160 4V பைக்கிற்கு ரூ. 99,950 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல TVS Apache RTR 200 4V பைக்கிற்கு ரூ. 1.24 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளுக்கான விலையும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி பைக்கில் 159.7 சிசி லிக்விடு கூல்டு எஞ்சின் உள்ளது. இது 16 பிஎச்பி பவர் மற்றும் 14.1 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். பைக்கின் எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.