ஓவியாவுக்கு உதவி செய்ய 'ரெமோ'வாக மாறிய நடிகர்: யார்னு தெரியுதா?

நடிகர் விதுஷ் சவுத்ரி ஓவியா சீரியலுக்காக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு பெண் கெட்டப் போட்டுள்ளார்.


கலர்ஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஓவியா சீரியலுக்கா விதுஷ் சவுத்ரி புது முயற்சி செய்துள்ளார். அவர் அந்த சீரியலில் சில காட்சிகளில் பெண் வேடத்தில் அதுவும் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வந்தது போன்று நர்ஸ் கெட்டப்பில் வருகிறார்


தான் நர்ஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விதுஷ் ஓவியா சீரியலை தவறாமல் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நர்ஸ் கெட்டப்பில் பார்க்க அச்சு அசல் பெண் மாதிரியே இருக்கிறார் விதுஷ். அவரின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

நீங்கள் கிளீன் ஷேவ் செய்தபோதே சந்தேகப்பட்டோம். அது சரியாப் போச்சு. ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் மேடம் சாரி சார். ரொம்ப க்யூட். கடவுளே, நான் பார்ப்பது கனவா இல்லை நிஜமா?. என் கண்களையே நம்ப முடியவில்லையே.


இப்படியே வெளியே சென்றுவிடாதீர்கள், பெண் என்று நினைத்து யாராவது எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடின்னு பாட்டு பாடிடப் போறாங்க.

செம, வேற லெவல், அம்மாவிடம் சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க என்று தெரிவித்துள்ளன