ஸ்வீடன் நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் உள்கட்டுமானத் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசியத் தலைநகர் டெல்லியில் இந்தியா - ஸ்வீடன் தொழில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவில் முதலீட்டுக்கான இடங்கள் நிறைய இருப்பதாகவும்,
ஸ்வீடன் நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் உள்கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
”வங்கி, சுரங்கம், காப்பீடு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கார்பரேட் வரியைக் குறைத்தது அதில் ஒரு உதாரணமாகும். உள்கட்டுமானத் துறையில் மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.100 கோடி வரையில் முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது” எனவும் நிர்மலா சீதாராமன் அந்த மாநாட்டில் பேசினார்.