தமிழ் பெண்ணும் அழகு,
இந்திய கலாசாரம், சம்பிரதாயங்கள் மீது இந்த அளவுக்கு ஈர்ப்பு உண்டானது எப்படி என்று மணமகன் கயல் மார்ஸல் மோலர்க்கிடம் கேட்டபோது உற்சாகமாக பதிலளித்தார்.

 

‘‘என்னுடைய நண்பர் அமெரிக்க பிரஜை. அவருக்கும், இந்திய பெண்ணுக்கும் காதல் உருவானது. இருவீட்டார் சம்மதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அவர்களது திருமணம் நடந்தது. அதில் பங்கேற்க நானும் வந்திருந்தேன்.

 

இந்தியாவின் பாரம்பரிய முறைப்படி நடந்த அந்த திருமணம் என்னை வெகுவாக கவர்ந்தது. இந்திய கலாசாரத்தை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நண்பரின் திருமணத்தில் பங்கேற்ற பின்புதான் இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டானது. இந்திய பெண்கள் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு.

 

நண்பரின் திருமணம் ஏற்படுத்திய தாக்கம் இந்திய பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும் என்ற ஆவலை துளிர்விட செய்துவிட்டது. எனது விருப்பத்தை குடும்பத்தினரிடமும் அவ்வப்போது கூறி வந்தேன். அந்த சமயத்தில்தான் சப்ரினாவை சந்தித்தேன், நட்பு ரீதியாக பழகினோம். ஒரு கட்டத்தில் அவர்தான் என்னுடைய வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது’ என்று காதலை சப்ரினாவிடம் வெளிப்படையாக கூறினேன். அவர் சட்டென்று ஒப்புக்கொள்ளவில்லை. யோசித்து சொல்வதாக கூறினார். நான் மென்மையாக பேச கூடியவன்

 

, அதுவும், எனது சுபாவமும், செயல்பாடும் சப்ரினாவுக்கு பிடித்திருந்தது. அதனால் என்னை வாழ்க்கை துணையாக ஏற்க சம்மதம் தெரிவித்தார். எங்கள் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தோம், அவர்களும் எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு ஆமோதித்தனர். எங்கள் திருமணம், இந்திய முறைப்படி நடத்த வேண்டும் என்பதில் நான் விடாப்பிடியாக இருந்தேன். இங்கு வந்து திருமணம் செய்து கொண்டது புதுமையான அனுபவத்தை தந்தது.